நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால் உங்களுடைய பிளாக் போஸ்ட்களை இந்த வெப்சைட்டில் இணைத்தால் போதும் அவர்கள் உங்களுடைய பதிவை பரிசீலித்துவிட்டு நல்ல கருத்துக்கள் செய்திகள் இருப்பின் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். சுமாராக ஒரு நல்ல செய்திக்கு ரூபாய் 2500 வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
உங்களுக்கு இதுபோன்ற செய்திகள் உபயோகமாக இருப்பின் உங்களுடைய விருப்பத்தை வாக்குகளாக தெரிவியுங்கள். அது எங்களுக்கு ஊக்கத்தையும் இதுபோன்ற செய்திகளையும் உங்களுக்கு தர ஏதுவாக இருக்கும். தங்கள் வருகைக்கு - தங்கள் வாக்குகளுக்கு நன்றி!.
சமைக்காமலே சாப்பிடக்கூடிய கோமல் சாயல் எனப்படும் புதுவகை அரிசியை ஒரிசா விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
ஒரிசா மாநிலம் கட்டாக் பகுதியில் உள்ள சென்ட்ரல் ரைஸ் ரிசர்ச் இன்ஸ்டியூட்டைச் (சிஆர்சிஐ) சேர்ந்த விஞ்ஞானிகள் புதுமையான அரிசி ரகங்களை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இவர்கள் தொடர்ந்து மேற்கொண்ட ஆராய்ச்சியின் பயனாக அரிசியை வெந்நீரில் வேகவைக்காமல், வெறும் தண்ணீரில் அரைமணி நேரம் ஊறவைத்த பின்னர் அதனை அப்படியே எடுத்து சாதமாக சாப்பிடும் அரிசி வகையை உருவாக்கியுள்ளனர்.
இதுகுறித்து விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், தற்போது பயன்படுத்தும் அரிசி வகைகளில் அமிலோஸ் எனப்படும் சத்து 20 முதல் 25 சதவீதம் வரை இருப்பதால் அரிசிகள் ஒருவித கனத்த தன்மையூடன் இருக்கும். இதனால் அரிசியை வேகவைத்து சாப்பிடவேண்டியுள்ளது. ஆனால் நாங்கள் தயாரித்துள்ள கோமல் சாயல் என பெயரிடப்பட்ட இந்த அரிசியில் அமிலோஸ் 4.5 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் இருக்கும். எனவே லேசான தன்மையூடன் இருக்கும்.
இவ்வகை அரிசியை அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் அப்படியே சாதம்போல் சாப்பிடலாம் என்று தெரிவித்தார்.
நன்றி தினகரன் நாளிதழ்
நேற்று 7.04.2010 அன்று நமது இளையராஜா அவர்கள் ஜனாதிபதி அவர்களிடமிருந்து பத்ம விருதை பெற்றுக்கொண்டார். சங்கடங்கள் இருந்தபோதும் அரசு விருது எனும் காரணத்தால் புறக்கணிக்காமல் பெற்றுக்கொண்டதாக தெரிந்தது. விருதைப்பெறும்போது அவர் முகத்தில் மகிழ்ச்சி காணப்படவில்லை.
இசையில் ஞானியாய் இசைக்கடலில் வாழந்து கொண்டிருக்கும் இசையே. பல வெளிநாட்டு விருதுகள் உன் இடம் தேடி வரும்.
************
இந்த இசைக்கடலின் இசையில் வாழ்க்கையில் தொலைந்துபோன பலர் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். வாழ்க பல்லாண்டு நம் இசைக்கடல். வாழ்த்துங்கள் உங்கள் வாழ்த்துக்களை வாக்குகளாக
அடந்த காட்டு பகுதியில் இளம் ஜோடியினர் செக்ஸ் வைத்து கொள்வதை, நாட்டு வனத்துறையினர் ஆறாயிரம் மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர்.
பிரிட்டனில் லங்காஷயர் மற்றும் டார்வென் பகுதிகளையொட்டிய காட்டு பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள் உள்ளன.
சுற்றுலாவுக்காக வரும் இளம் ஜோடியினர் இந்த காட்டு வழிபாதையில் மரங்கள் அடர்ந்த பகுதியில் ஓதுங்கி தங்கள் சல்லாபங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இதனால்-குழந்தைகளை அழைத்துவரும் மற்ற சுற்றுலாப் பயணிகள் சங்கடத்துக்கு உள்ளாயினர். மற்றவர்களை சங்கடத்துக்குள்ளாக்கும் வகையில் உங்கள் அந்தரங்க நடவடிக்கை அமையக்கூடாது என்ற வகையில், இந்த காட்டுப்பகுதியில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.
இருப்பினும், இளம் ஜோடிகள் எதை பற்றியும் கவலைப்படாமல் மரத்தின் பின்புறத்தில் படுத்துக்கொண்டு சில்மிஷங்களை செய்து வந்தனர்.
சல்லாபகாரர்களுக்கு வழி வகுக்கும் இந்த மரங்களை போலீசார் உதவியுடன் இப்பகுதி நிர்வாகம் வெட்டி தள்ளியது. ஆறாயிரம் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு அந்த பகுதி வெட்டவெளி ஆகிவிட்டது.
இதனால் உள்ளூர் நிர்வாகம் திருப்திபட்டாலும், பசுமை ஆர்வலர்களுக்கு வருத்தம் தான். நூற்றாண்டு பழமைமிக்க மரங்களை, ஒரே நாளில் எப்படி வெட்டி சாய்க்கலாம்? இதுகுறித்து, முன்னறிவிப்பு வெளியிட்டிருக்கவேண்டும் என பசுமை ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்த பசுமையான பகுதி சிவப்பு விளக்கு பகுதியாக மாறிவிடக்கூடாது, என்ற நல்லெண்ணத்திலேயே நாங்கள் மரங்களை வெட்டுவதற்கு ஒப்புகொண்டோம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
*********
இதைப்போல் நம் அரசும் பூங்காக்களில் கவனிக்குமா! மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசுகள் நூற்றாண்டு கால மரங்கள் என தெரிந்தும், அவற்றை அழித்து மக்களுக்கு நிம்மதியைதர செய்திருக்கிறது. நம் அரசு யோசிக்குமா!
[நீங்களும் இந்த கருத்தை ஆமோதிக்கிறீர்களா - உங்கள் ஒப்புதலை பதிவுசெய்யுங்கள் வாக்குகளாக]
"மதக் கலவரங்களை கையாள புதிய சட்டம்"
சிறுபான்மையினரின் நலனைப் பாதுகாப்பது என்பதில், அரசு உறுதியாக உள்ளது. மதவன்முறையை கையாள தேவையான புதிய சட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றறப்படும். என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார். பெல்லாரி மற்றும் ஐதராபாத்தில் நிகழ்ந்த இனக்கலவரங்களை அடுத்து இதைத் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த மாநில சிறுபான்மையினர் கமிஷன்கள் மாநாட்டில் நேற்று பேசிய அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது
நாட்டின் பல பகுதிகளில் மதக் கலவரங்கள் நிகழந்துள்ளன. இவற்றில் சிறு தகராறுகள், பல பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளன. இதனால் சிறுபான்மையினர் மத்தியில் அச்சமும், ஒரு பாதுகாப்பற்ற தன்மையும் உருவாகியுள்ளது.
அவர்கள் கவலைப்பட தேவையில்லை. சிறுபான்மையினரின் நலனை பாதுகாக்க வேண்டும் என்பதிலும், மதசார்பற்ற தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும், மத சிறுபான்மையினர் அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதிலும் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
மத வன்முறை அரசுக்கு கவலை தரும் ஒரு அம்சம். இதை கருத்தில் கொண்டே மத வன்முறை (தடுப்பு மற்றும் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு) மசோதா உருவாக்கப்பட்டு, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு மசோதா அனுப்பப்பட்டது. அத்துடன் தேசிய சிறுபான்மையினர் கமிஷன் மற்றும் இதர அமைப்புகளால் பரிசீலிக்கப்பட்டன. அவை மசோதாவில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டின. அந்த அடிப்படையில், மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த மாற்றங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. திருத்தப்பட்ட மசோதா மீண்டும் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் அது சட்ட மசோதாவாக உருவாகும். இவ்வாறு அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
******
(கண்டிப்பாக இந்த சட்டங்கள் குற்றங்களை குறைக்கும் என எதிர்பார்க்கலாம். உங்களின் கருத்தை சொல்லவும்)
Shoaib Malik & Saniya Mirza
இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார் சானியா மிர்சா. கடந்த 2009, ஜுலை 10ம் தேதி சானியா மற்றும் அவரது குழந்தை பருவ நண்பரான முகமது சோஹ்ராப் மிர்சா இடையே திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடந்தது.
இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக. கடந்த ஜனவரி மாதம் திடீரெண நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று பாகிஸ்தானில் உள்ள தனியார் டிவி சேனலில், இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்க இருப்பதாக, செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து அந்த சேனலில் வெளியான செய்தியில், சோயப் மாலிக்கின் தாயார், ஐதராபாத்தில் உள்ள சானியாவின் பெற்றோரை சந்தித்து, மாலிக் - சானியா திருமணம் குறித்து உறுதி செய்துள்ளார் என்றும், வரும் ஏப்ரல் மாதம் 16 மற்றும் 17ம் தெதி லாகூரில் இவர்களது திருமண வரவேற்பு நடக்க இருக்கிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.