சானியா - சோயப் மாலிக் திருமணம்?
இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார் சானியா மிர்சா. கடந்த 2009, ஜுலை 10ம் தேதி சானியா மற்றும் அவரது குழந்தை பருவ நண்பரான முகமது சோஹ்ராப் மிர்சா இடையே திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடந்தது.
இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக. கடந்த ஜனவரி மாதம் திடீரெண நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று பாகிஸ்தானில் உள்ள தனியார் டிவி சேனலில், இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்க இருப்பதாக, செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து அந்த சேனலில் வெளியான செய்தியில், சோயப் மாலிக்கின் தாயார், ஐதராபாத்தில் உள்ள சானியாவின் பெற்றோரை சந்தித்து, மாலிக் - சானியா திருமணம் குறித்து உறுதி செய்துள்ளார் என்றும், வரும் ஏப்ரல் மாதம் 16 மற்றும் 17ம் தெதி லாகூரில் இவர்களது திருமண வரவேற்பு நடக்க இருக்கிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments