பூங்காக்களில் செக்ஸ் தொல்லை


அடந்த காட்டு பகுதியில் இளம் ஜோடியினர் செக்ஸ் வைத்து கொள்வதை, நாட்டு வனத்துறையினர் ஆறாயிரம் மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர்.

பிரிட்டனில் லங்காஷயர் மற்றும் டார்வென் பகுதிகளையொட்டிய காட்டு பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள் உள்ளன.

சுற்றுலாவுக்காக வரும் இளம் ஜோடியினர் இந்த காட்டு வழிபாதையில் மரங்கள் அடர்ந்த பகுதியில் ஓதுங்கி தங்கள் சல்லாபங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இதனால்-குழந்தைகளை அழைத்துவரும் மற்ற சுற்றுலாப் பயணிகள் சங்கடத்துக்கு உள்ளாயினர். மற்றவர்களை சங்கடத்துக்குள்ளாக்கும் வகையில் உங்கள் அந்தரங்க நடவடிக்கை அமையக்கூடாது என்ற வகையில்
, இந்த காட்டுப்பகுதியில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.

இருப்பினும்
, இளம் ஜோடிகள் எதை பற்றியும் கவலைப்படாமல் மரத்தின் பின்புறத்தில் படுத்துக்கொண்டு சில்மிஷங்களை செய்து வந்தனர்.

சல்லாபகாரர்களுக்கு வழி வகுக்கும் இந்த மரங்களை போலீசார் உதவியுடன் இப்பகுதி நிர்வாகம் வெட்டி தள்ளியது. ஆறாயிரம் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு அந்த பகுதி வெட்டவெளி ஆகிவிட்டது.

இதனால் உள்ளூர் நிர்வாகம் திருப்திபட்டாலும்
, பசுமை ஆர்வலர்களுக்கு வருத்தம் தான். நூற்றாண்டு பழமைமிக்க மரங்களை, ஒரே நாளில் எப்படி வெட்டி சாய்க்கலாம்? இதுகுறித்து, முன்னறிவிப்பு வெளியிட்டிருக்கவேண்டும் என பசுமை ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்த பசுமையான பகுதி சிவப்பு விளக்கு பகுதியாக மாறிவிடக்கூடாது
, என்ற நல்லெண்ணத்திலேயே நாங்கள் மரங்களை வெட்டுவதற்கு ஒப்புகொண்டோம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

*********
இதைப்போல் நம் அரசும் பூங்காக்களில் கவனிக்குமா! மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசுகள் நூற்றாண்டு கால மரங்கள் என தெரிந்தும், அவற்றை அழித்து மக்களுக்கு நிம்மதியைதர செய்திருக்கிறது. நம் அரசு யோசிக்குமா!

[நீங்களும் இந்த கருத்தை ஆமோதிக்கிறீர்களா - உங்கள் ஒப்புதலை பதிவுசெய்யுங்கள் வாக்குகளாக]

0 Comments

Follow Me On Instagram