மதக் கலவரங்களை கையாள புதிய சட்டம்




"மதக் கலவரங்களை கையாள புதிய சட்டம்"


சிறுபான்மையினரின் நலனைப் பாதுகாப்பது என்பதில், அரசு உறுதியாக உள்ளது. மதவன்முறையை கையாள தேவையான புதிய சட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றறப்படும். என மத்திய உள்துறை அமைச்சர் சிம்பரம் கூறியுள்ளார். பெல்லாரி மற்றும் ஐதராபாத்தில் நிகழ்ந்த இனக்கலவரங்களை அடுத்து இதைத் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த மாநில சிறுபான்மையினர் கமிஷன்கள் மாநாட்டில் நேற்று பேசிய அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது

நாட்டின் பல பகுதிகளில் மதக் கலவரங்கள் நிகழந்துள்ளன. இவற்றில் சிறு தகராறுகள், பல பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளன. இதனால் சிறுபான்மையினர் மத்தியில் அச்சமும், ஒரு பாதுகாப்பற்ற தன்மையும் உருவாகியுள்ளது.

அவர்கள் கவலைப்பட தேவையில்லை. சிறுபான்மையினரின் நலனை பாதுகாக்க வேண்டும் என்பதிலும், மதசார்பற்ற தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும், மத சிறுபான்மையினர் அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதிலும் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

மத வன்முறை அரசுக்கு கவலை தரும் ஒரு அம்சம். இதை கருத்தில் கொண்டே மத வன்முறை (தடுப்பு மற்றும் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு) மசோதா உருவாக்கப்பட்டு, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு மசோதா அனுப்பப்பட்டது. அத்துடன் தேசிய சிறுபான்மையினர் கமிஷன் மற்றும் இதர அமைப்புகளால் பரிசீலிக்கப்பட்டன. அவை மசோதாவில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டின. அந்த அடிப்படையில், மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த மாற்றங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. திருத்தப்பட்ட மசோதா மீண்டும் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் அது சட்ட மசோதாவாக உருவாகும். இவ்வாறு அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

******

(கண்டிப்பாக இந்த சட்டங்கள் குற்றங்களை குறைக்கும் என எதிர்பார்க்கலாம். உங்களின் கருத்தை சொல்லவும்)

0 Comments

Follow Me On Instagram